ஆன்மிகம்
வைத்தீஸ்வரன்கோவில் குடமுழுக்கு

வைத்தீஸ்வரன்கோவில் குடமுழுக்கையொட்டி 4 ரத வீதிகளில் 144 தடை உத்தரவு

Published On 2021-04-29 05:41 GMT   |   Update On 2021-04-29 05:41 GMT
வைத்தீஸ்வரன்கோவில் குடமுழுக்கையொட்டி 4 ரத வீதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா நீதிமன்ற உத்தரவுப்படியும், தமிழக அரசின் கொரோனா வழிகாட்டுதல்படியும் இன்று (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.

இந்தநிலையில் பக்தர்கள் கூடுவதை தடுக்கும் வகையில் இன்று காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பரிந்துரையின் பேரில் வைத்தீஸ்வரன்கோவில் 4 ரத வீதிகளில் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தடுக்க மாவட்ட கலெக்டர் லலிதா 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி அங்கு 5 பேருக்கு மேல் கூட்டமாக செல்லக் கூடாது, மருந்துக்கடைகள், பால் விற்பனை நிலையங்களை தவிர அனைத்து கடைகளையும் மூட வேண்டும்.

மக்கள் குடமுழுக்கை பார்க்கும் வகையில் யூடியூப் மற்றும் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

எனவே யாரும் வைத்தீஸ்வரன்கோவிலுக்கு தரிசனம் செய்ய வரவேண்டாம் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News