தொழில்நுட்பம்

ட்விட்டரில் ட்விட்களை மறைக்கும் புதிய வசதி

Published On 2019-03-01 09:20 GMT   |   Update On 2019-03-01 09:21 GMT
ட்விட்டர் சமூக வலைதளத்தில் ட்விட்களை மறைப்பதற்கான வசதி வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. #Twitter



ட்விட்டர் தளத்தில் ஹைட் ட்விட் (Hide Tweet) எனும் அம்சம் வழங்கப்பட இருக்கிறது. ட்விட்டர் இந்த அம்சம் வழங்கப்படுவதை உறுதி செய்திருக்கிறது. புதிய ஹைட் ட்விட் அம்சம் மூலம் பயனர்கள் தங்களது உரையாடல்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும். 

ட்விட்டரின் புதிய அம்சம் பயனர் ட்விட்களை ஷேர் செய்யும் ஆப்ஷனை க்ளிக் செய்தால் தெரியும். ட்விட்டரில் பயனரை மியூட் அல்லது பிளாக் செய்வதற்கு மாற்றாக உரையாடல்களை கட்டுப்படுத்துவதற்கு ஹைட் ட்விட் பயன்படும்.

இதுதவிர வியூ ஹிடன் ட்விட்ஸ் (View Hidden Tweets) எனும் அம்சத்தை ட்விட்டர் உருவாக்கி வருவதாக தெரிகிறது. இதன் மூலம் பயனர்கள் ஏற்கனவே ஹைட் செய்த ட்விட்களை அன்-ஹைட் செய்யலாம். புதிய அம்சம் வழங்கப்படுவதை ட்விட்டர் செய்தி தொடர்பாளர் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறார்.



தற்சமயம் மியூட் மற்றும் பிளாக் செய்வதை போன்றே இயங்கும் இந்த அம்சம் ட்விட்டரில் அனைவருக்கும் மற்றவர்களை அமைதிப்படுத்தும் வசதியை வழங்கும். இது பயனர்களை மறைக்கப்பட்ட ரிப்ளைக்களை க்ளிக் செய்து பார்க்க வேண்டும். மறுபுறம் பயனர் விரும்பும் பதில்களை மட்டும் பதிவிடும் வசதி பலருக்கும் பயனுள்ளதாகவே இருக்கும்.

ட்விட்டரில் சுமூகமான நடைமுறையை அமல்படுத்தும் முயற்சியில் புதிய அம்சம் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பயனர்கள் மற்றவர்களை மியூட் அல்லது பிளாக் செய்வதை விட இந்த அம்சம் கொண்டு அவர்களிடம் இருந்து சற்று தள்ளியிருக்க முடியும்.
Tags:    

Similar News