செய்திகள்
பச்சை, சிவப்பு நிறத்தில் கண்டெடுக்கப்பட்ட பாசிமணிகள்.

கீழடியில் பச்சை, சிவப்பு நிறத்தில் பாசிமணிகள் கண்டெடுப்பு

Published On 2021-06-22 03:24 GMT   |   Update On 2021-06-22 03:24 GMT
கீழடியில் தற்போது 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருப்புவனம்:

பண்டைய கால வரலாற்றில் தமிழர்கள் நாகரிகத்துடன் வாழ்ந்தார்கள் என்பதை கீழடி அகழ்வாராய்ச்சி உலகிற்கு எடுத்துக்காட்டி வருகிறது. 

தற்போது 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஏராளமான பொருட்கள் கிடைத்துள்ளன. இந்த நிலையில் கீழடியில் நேற்று நடைபெற்ற அகழாய்வு பணியின் போது, 4 பாசி மணிகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றில் 3 பச்சை நிறத்திலும், ஒன்று சிவப்பு நிறத்திலும் உள்ளன. தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளும்போது இன்னும் கூடுதலாக பொருட்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
Tags:    

Similar News