செய்திகள்
பும்ரா, சமி, அப்துல் ரசாக்

116 கிமீ வேகத்தையே தாக்குப்பிடிக்க முடியாதவர்- அப்துல் ரசாக்கை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Published On 2019-12-06 06:52 GMT   |   Update On 2019-12-06 06:52 GMT
பும்ராவை குழந்தை பவுலர் என விமர்சித்த பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக்கை பும்ரா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேலி செய்து வருகின்றனர்.
மும்பை:

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரான அப்துல் ரசாக் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை கிண்டல் செய்யும் விதமாக சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசினார். ‘கிளைன் மெக்ராத், வாசிம் அக்ரம் போன்ற மிகச்சிறந்த பவுலர்களுக்கு எதிராக நான் விளையாடி இருக்கிறேன். என்னை பொறுத்தவரை இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா ஒரு குழந்தை (பேபி) பவுலர். இப்போது விளையாடி இருந்தால் அவரது பந்து வீச்சுக்கு எதிராக நான் ஆதிக்கம் செலுத்தி, அடித்து நொறுக்கியிருக்க முடியும்’, என ரசாக் கூறினார்.

அவரது பேச்சுக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்களும், பும்ராவின் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் பதிலடி அளித்து ரசாக்கை கலாய்த்து வருகின்றனர்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா சராசரியாக மணிக்கு 142 கி.மீ வேகத்தில் பந்து வீசக்கூடியவர் அதிகபட்சமாக 153 கி.மீ வேகத்திலும் வீசியுள்ளார். கடந்த உலகக்கோப்பை போட்டியில் கூட அனைத்து நாட்டு வீரர்களும் பும்ராவின் பந்து வீச்சில் ரன் எடுக்க சற்று திணறினர். அவரைப் பார்த்து குழந்தை பவுலர் என்று ரசாக் கூறியிருப்பது தான் இந்த ஆண்டின் சிறந்த ஜோக் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.  



மற்றொரு ரசிகர் கடந்த 2011 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் முனாப் படேல் பந்து வீச்சில் அப்துல் ரசாக் (3 ரன்கள்) கிளீன் போல்ட் ஆனார். முனாப் படேல் 116 கிமீ/ மணி வேகத்தில் பந்து வீசிய போதே போல்ட் ஆனவர், பும்ரா பந்து வீச்சை அடித்து நொறுக்குவேன் என கூறுவது மிகவும் வேடிக்கையானது என கூறியுள்ளார்.
Tags:    

Similar News