செய்திகள்
குளிர் காலம்

வட இந்தியாவில் இரவு நேர வெப்ப நிலை 5 டிகிரி செல்சியஸ் வரை குறையும்

Published On 2020-12-14 19:13 GMT   |   Update On 2020-12-14 19:13 GMT
அடுத்த 2 அல்லது 3 தினங்களில் வட இந்தியாவில் இரவு நேர வெப்ப நிலை 5 டிகிரி செல்சியஸ் வரை குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

வட இந்தியாவில் அடுத்த 2 அல்லது 3 தினங்களில் இரவு நேர வெப்ப நிலை 5 டிகிரி செல்சியஸ் வரை குறையும்  என்று  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

பஞ்சாப், அரியானா, சண்டிகர், ராஜஸ்தானின் வடமேற்கு பகுதிகள் ஆகிய இடங்களில் குளிர் மற்றும் மிகக் கடுமையான குளிர் வெப்ப நிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வட இந்திய பகுதிகளில் ஏற்கனவே கடுமையான பனி கொட்டும் நிலையில், வெப்ப நிலை மேலும் குறையும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

நடப்பு குளிர் காலத்தில் வெப்ப நிலை இயல்பை விட மிகக் குறைவாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கணித்தது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News