ஆன்மிகம்
கொடியேற்றத்தை தொடர்ந்து, கொடி மரத்துக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டபோது எடுத்தபடம்.

பால்வண்ணநாதர் சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றம்

Published On 2019-08-28 04:22 GMT   |   Update On 2019-08-28 04:22 GMT
கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலின் துணை கோவிலான கரிவலம்வந்தநல்லூர் ஒப்பனை அம்பாள் சமேத ஸ்ரீ பால்வண்ணநாதர் சுவாமி கோவிலில் ஆவணி தவசு திருவிழா நேற்று கொடியேற்றதுடன் தொடங்கியது. இதை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, திருவனந்தல் பூஜை நடந்தது.

அதனை தொடர்ந்து கொடிபட்டம் வீதி உலாவும், காலை 8.40 மணிக்கு அம்பாள் சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழா நாட்களில் அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 6-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் 10 மணிக்குள் நடைபெறுகிறது. சிகர நிகழ்ச்சியான ஆவணி தவசுக்காட்சி 8-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு ஒப்பனை அம்பாளுக்கு முகலிங்கநாதர் வடிவமாக ரிஷப வாகனத்தில் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 10 மணிக்கு மேல் 11 மணிக்குள் யானை வாகனத்தில் பால்வண்ணநாதராக அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா நாட்களில் மண்டகபடிதாரர்கள் சார்பில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் மண்டகப்படிதரரர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News