செய்திகள்
மராட்டிய மந்திரி நவாப் மாலிக்

பிரதமர் மோடி உரை குறித்து சத்தீஸ்கர், மகாராஷ்டிரா மாநில மந்திரிகள் என்ன சொல்கிறார்கள்?

Published On 2021-04-20 17:30 GMT   |   Update On 2021-04-20 17:41 GMT
டாக்டர்கள், வல்லுனர்கள் மற்றும் பலத்தரப்பினரிடையே ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி இன்றிரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
பிரதமர் மோடி இன்று இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது மாநில அரசுகள் முழு ஊரடங்கு என்பதை கடைசி ஆயுதமாக பயன்படுத்த வேண்டும் என மாநில அரசுகளை வலியுறுத்தினர்.

இந்த நிலையில் பிரதமர் மோடி உரை குறித்து மகாராஷ்டிரா மாநில மந்திரி நவாப் மாலிக் கூறுகையில் ‘‘பிரதமர் மோடி மாநிலங்களின் கடைசி வாய்ப்பாகத்தான் லாக்டவுன் இருக்க வேண்டும் என்கிறார். ஆனால் நாட்டின் பல்வேறு நீதிமன்றங்கள் லாக்டவுனை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது. பிரதமர் மோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், ஏழை மக்கள், சிறு வணிகர்களுக்கு நிவாரணம் அறிவிப்பார் என்று மக்கள் நம்பிக்கையுடன் இருந்தனர்’’ என்றார்.



சத்தீஸ்கர் மாநில மந்திரி டிஎஸ் சிங் தியோ ‘‘நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் என்று மோடி அறிவிப்பார் என்று நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால் மோடி கொரோனா தடுப்பூசி தயாரிப்பு அளவு கூட்டுவது, மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படுவது குறித்து பேசவில்லை’’ என்றார்.

இதற்கிடையில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் ‘‘ஒட்டுமொத்த கொரோனா தடுப்பூசிகளையும் இலவசமாக வழங்க வேண்டும்’’ என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
Tags:    

Similar News