செய்திகள்
கொரோனா தடுப்பூசி

ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 ஆயிரம் கொரோனா தடுப்பூசி இருப்பு

Published On 2021-04-30 17:22 GMT   |   Update On 2021-04-30 17:22 GMT
ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 ஆயிரம் கொரோனா தடுப்பூசி கையிருப்பில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளுக்குநாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நோய் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதோடு கொரோனா தடுப்பூசி போடும் பணியையும் முடுக்கி விட்டுள்ளது. தற்போதைய நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஆயிரத்து 229 பேருக்கும், இதுவரை 66 ஆயிரத்து 527 பேருக்கும் என 67 ஆயிரத்து 756 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி மாவட்ட மருந்து கிடங்கில் 4 ஆயிரத்து 410, அரசு ஆஸ்பத்திரியில் 510, ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆயிரத்து 760, பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் 260 எண்ணிக்கையில் இருப்பு உள்ளது.

இதுதவிர, பரமக்குடி ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆயிரத்து 120 மருந்து கையிருப்பு உள்ளது. ஆகமொத்தம் மாவட்டத்தில் 8 ஆயிரத்து 60 கொரோனா மருந்துகள் இருப்பு உள்ளன.

தேவையான அளவு இருப்பு உள்ளதோடு இன்னும் மருந்துகள் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும் ஓரிருநாளில் வந்துவிடும் என்றும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பதிவு அடிப்படையில் அனைவருக்கும் போடும் அளவிற்கு மருந்து தட்டுப்பாடின்றி இருக்கும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News