செய்திகள்
இந்திய அணி வீரர்கள்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 183 ரன்களுக்கு ஆல் அவுட்

Published On 2021-08-04 17:55 GMT   |   Update On 2021-08-04 17:55 GMT
பந்து வீச்சை பொருத்தவரை பும்ரா 4 விக்கெட்டுகளையும் சமி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
நாட்டிங்காம்:

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இங்கிலாந்து சென்றுள்ளது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இன்று (புதன்கிழமை)  தொடங்கியது.

இந்தப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பந்து வீசிய இந்திய அணி, தனது துல்லியமான பந்து வீச்சால் இங்கிலந்து அணியை நிலைகுலையவைத்தது. பும்ரா, சமி ஆகியோர் இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களை சீரான இடைவெளியில் வெளியேற்றினர். 

65.4-ஓவர்கள் தாக்குப் பிடித்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 183- ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.  இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஜோ ரூட் 64 ரன்கள் அடித்தார். பந்து வீச்சை பொருத்தவரை பும்ரா 4 விக்கெட்டுகளையும் சமி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.

பின்னர் முதல் இன்னிங்ஸ் தொடங்கிய இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது.
Tags:    

Similar News