செய்திகள்
திருமணத்தை பதிவு செய்த தம்பதி

சார் பதிவாளர் அலுவலகம் திறந்த உடனேயே திருமணத்தை பதிவு செய்த தம்பதி

Published On 2021-06-08 01:43 GMT   |   Update On 2021-06-08 01:43 GMT
சென்னை, பெரியமேட்டில் உள்ள சார் பதிவாளர் அலுவலகம் நேற்று திறக்கப்படுவதற்கு முன்பாகவே, சூளையை சேர்ந்த தம்பதி ஆர்வத்துடன் வந்து காத்திருந்தனர்.
சென்னை:

தமிழகம் முழுவதும் ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வு காரணமாக சார் பதிவாளர் அலுவலகங்கள் நேற்று முதல் திறக்கப்பட்டன.

இந்த நிலையில் சென்னை, பெரியமேட்டில் உள்ள சார் பதிவாளர் அலுவலகம் நேற்று திறக்கப்படுவதற்கு முன்பாகவே, சூளையை சேர்ந்த சாய் அம்ருதா சத்யபாமா-ராஜீவ் எனும் தம்பதி ஆர்வத்துடன் வந்து காத்திருந்தனர். உறவினர்கள் சிலரும் அவர்களுடன் வந்திருந்தனர். அலுவலகம் திறக்கப்பட்டதும் வேகமாக சென்று திருமண பதிவை மேற்கொண்டனர். இதுகுறித்து மாதவ் அப்பாராவ் என்பவர் கூறியதாவது:-

எனது மகளுக்கு கடந்த மாதம் 22-ந்தேதி திருமணம் நடந்தது. எனது மருமகன் அமெரிக்காவில் சிவில் என்ஜினீயராக இருக்கிறார். திருமணம் முடிந்ததும் இருவரும் அமெரிக்கா செல்ல இருந்தனர். பாஸ்போர்ட் உள்ளிட்ட எல்லா ஆவணங்களும் தயாராக இருந்தாலும், திருமண சான்றிதழ் இல்லாததால் அவர்கள் வெளிநாடு செல்ல முடியவில்லை. ஊரடங்கு காரணமாக சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படாததால் திருமணத்தை பதிவு செய்யவும் முடியவில்லை.

இந்த நிலையில் இன்றைய தினம் (நேற்று) அலுவலகம் திறக்கப்பட்ட உடனேயே எனது மகளின் திருமணத்தை பதிவு செய்து அதற்கான சான்றிதழை பெற்றுள்ளோம். இதனைத்தொடர்ந்து வருகிற 12-ந்தேதி அவர்கள் அமெரிக்கா செல்ல உள்ளார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுபோல பல்வேறு காரணங்களுக்காக நேற்று சார் பதிவாளர் அலுவலகங்கள் நோக்கி மக்கள் சென்று வந்ததை பார்க்க முடிந்தது.
Tags:    

Similar News