லைஃப்ஸ்டைல்
கர்ப்ப காலத்தில் பெண்கள் கரும்புச்சாறு குடிக்கலாமா?

கர்ப்ப காலத்தில் பெண்கள் கரும்புச்சாறு குடிக்கலாமா?

Published On 2019-08-27 05:21 GMT   |   Update On 2019-08-27 05:21 GMT
கர்ப்பிணிகள் கரும்புச்சாறு குடிக்கலாமா? ஒரு நாளைக்கு எவ்வளவு கரும்புச்சாறு குடிக்க வேண்டும்? என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
கலர் கலராக விற்கும் குளிர்பான பாட்டில்களை விடப் பல மடங்கு ஆரோக்கியமானது எனினும் கர்ப்பிணிகள் கரும்புச்சாறு குடிக்கலாமா? ஒரு நாளைக்கு எவ்வளவு கரும்புச்சாறு குடிக்க வேண்டும்? என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

செங்கரும்புகளில் வெள்ளைக் கரும்புகளைவிட கால்சியம், மெக்னீசியம், இரும்புச்சத்துகள் அதிகம் எனினும் வெள்ளைக் கரும்பில் உள்ள சுக்ரோஸ் உடனடியாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்காமல் சிறிது சிறிதாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கூட்டுவதால் வெள்ளைக் கரும்பிலிருந்து எடுக்கப்படும் கரும்புச்சாறு உடலுக்கு ஆரோக்கியமானது.

அதிகப்படியான வியர்வைக் காரணமாக நம்முடைய உடலில் நீர்ச்சத்து குறைந்து உடல் வறட்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதைத்தடுக்க தினமும் கரும்புச்சாறு குடிப்பதன் மூலம் உடலில் நீர்ச்சத்து குறைவதைத் தடுக்க முடியும். அதிகப்படியான சரும வறட்சியை உணரும் பெண்களும் தினமும் கரும்புச்சாறு எடுத்துக்கொள்ளலாம்.

கரும்புச்சாற்றுடன் ஐஸ் கலந்து குடிப்பதை அவசியம் தவிர்க்க வேண்டும். பெரும்பாலான கரும்புச்சாறு கடைகளில், கரும்பு அரைக்கும் மிஷினிலே கரும்புடன் சேர்த்து எலுமிச்சை, இஞ்சி, வெற்றிலை, துளசி அல்லது புதினாவை வைத்து ஒன்றாக அரைத்து சாறு எடுத்துக் கொடுப்பார்கள். இது உடலுக்குக் கூடுதல் பலனைத்தரும். சளி, காய்ச்சல் சமயங்களில் கூட இந்தச் சாற்றினை ஐஸ் இன்றி பருக நல்ல பலன் கிடைக்கும்.



உடல் சூடு காரணமாக சில பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்னை இருக்கும். அதிகப்படியான வெள்ளைப்படுதல் பிரச்னை உள்ள பெண்கள் கரும்புச்சாறு கடைகளில் இஞ்சி தவிர்த்து, கரும்புச்சாருடன், எலுமிச்சை சாறு மட்டும் சேர்த்து பருகுவது ஆரோக்கியமானது.

கரும்புச்சாறு உடலுக்குச் சூடு என்பதால் கர்ப்பிணிகள் தவிர்ப்பது நல்லது. அவசியமாகப் பருக வேண்டும் என நினைப்பவர்கள் இஞ்சி, துளசி தவிர்த்து பருகுவது நல்லது.

கரும்புச் சாறு இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிப்பது இல்லை என்பதால் சர்க்கரை நோயாளிகளும் கூட வாரம் இரண்டு முறை கரும்புச்சாறு பருகலாம்.

கர்ப்பிணிகள் அவர்களின் உடல் நலனுக்கு ஏற்ப மருத்துவர்களின் ஆலோசனை பெற்று கரும்புச் சாறு பருகலாம்.

கரும்பு பிழியும் இயந்திரங்கள் சுத்தமின்மை, சுத்தமில்லாத ஐஸ், ரோடுகளில் உள்ள தூசிகள் இவையெல்லாம் உடல் நலத்தைப் பாதிக்க வாய்ப்பு உள்ளது.
Tags:    

Similar News