ஆன்மிகம்
திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் 1008 சங்காபிஷேகம்

திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் 1008 சங்காபிஷேகம்

Published On 2020-12-15 04:45 GMT   |   Update On 2020-12-15 04:45 GMT
திருநள்ளாறு சனிபகவான் தனி சன்னதி கொண்டுள்ள தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் நேற்று கடைசி சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
திருநள்ளாறு சனிபகவான் தனி சன்னதி கொண்டுள்ள தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் நேற்று கடைசி சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பி விக்னேஸ்வர பூஜை, கும்ப பூஜை, மகா பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சதுர்வேத, ஆகம ஆசிர்வாதம், தேவார பாடல்கள் பாடப்பட்டு மகா தீபாராதனை நடத்தப்பட்டது.

பின்னர், சிவாச்சாரியார்கள் பிரதான சங்குகளை சுமந்து கோவிலின் உள் பிரகாரம் மற்றும் வெளிப்பிரகாரம் வலம் வந்து தர்பாரண்யேஸ்வரர், தியாகராஜருக்கு மகா அபிஷேகம் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி ஆதர்ஷ், கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சாமிகள் தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News