ஆன்மிகம்
நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவுக்கான கால்நாட்டும் நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம்.

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா கால் நாட்டு நிகழ்ச்சி

Published On 2021-10-19 04:35 GMT   |   Update On 2021-10-19 04:35 GMT
நெல்லையப்பர் கோவிலில் வருகிற 22-ந்தேதி கொடியேற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான காந்திமதி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி வருகிற 1-ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.
நெல்லை டவுன் நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருக்கல்யாண விழா விமரிசையாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் ஐப்பசி திருக்கல்யாண விழா விமரிசையாக நடைபெற உள்ளது.இதற்கான கால்நாட்டு நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. அம்பாள் சன்னதி முன்பு உள்ள ஊஞ்சல் மண்டப பகுதியில் கால்நாட்டப்பட்டது. பின்னர் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர்.

இதன் தொடர்ச்சியாக வருகிற 22-ந்தேதி கொடியேற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான காந்திமதி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி வருகிற 1-ந்தேதி (திங்கட்கிழமை) டவுன் காட்சி மண்டபத்தில் நடைபெறுகிறது.

2-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி -அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் ஊழியர்கள், பக்தர்கள் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News