செய்திகள்
பெரிய மார்க்கெட்டில் காய்கறி வாங்கும் பெண்களை காணலாம்

காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்வு- இல்லத்தரசிகள் அதிர்ச்சி

Published On 2021-10-18 02:51 GMT   |   Update On 2021-10-18 02:51 GMT
புதுச்சேரியில் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.48-க்கு விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
புதுச்சேரி:

புதுவைக்கு தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் வட மாநிலங்களில் இருந்து காய்கறிகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. தற்போது வடமாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கிருந்து காய்கறி வரத்து குறைந்துள்ளது.

எனவே தற்போது தமிழகத்தில் இருந்து மட்டுமே காய்கறிகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. தொடர் மழை மற்றும் வரத்து குறைவு காரணமாக புதுவையில் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் கடந்த வாரம் ரூ.20-க்கு விற்ற ஒரு கிலோ தக்காளி நேற்று ரூ.40-க்கும், சில்லறை விற்பனை கடைகளில் ரூ.45-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுதவிர கத்தரிக்காய் ரூ.40-க்கும், கேரட் ரூ.60-க்கும், பெரிய வெங்காயம் ரூ.35-க்கும், பீன்ஸ் ரூ.80-க்கும், உருளைக்கிழக்கு ரூ.30-க்கும், சின்ன வெங்காயம் ரூ.30-க்கும், முட்டைக்கோஸ் ரூ.12-க்கும், தேங்காய் பெரியது ரூ.25-க்கும், சிறியது ரூ.15-க்கும், பாகற்காய் ரூ.50-க்கும், அவரைக்காய் ரூ.40-க்கும் விற்பனை செய்யப்பட்டது. காய்கறி விலை உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து காய்கறி வியாபாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘வடமாநிலம், தமிழகத்தில் பெய்து வரும் மழை காரணமாக தற்போது காய் கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை அதிகரித்துள்ளது. இதேபோல் சமையலுக்கு அத்தியாவசியம் தேவைப்படும் பெரிய வெங்காயம் தற்போது கிலோ ரூ.35-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளி பண்டிகை வருவதால் இன்னும் அதன் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றார்.
Tags:    

Similar News