செய்திகள்
ராகுல் காந்தி

தமிழ் கலாச்சாரத்தை பிரதமர் மோடி அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்- ராகுல் காந்தி

Published On 2021-01-24 14:24 GMT   |   Update On 2021-01-24 14:24 GMT
திருப்பூர் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல்காந்தி தமிழ் என்பது மொழி, கலாச்சாரம், வரலாறு கொண்டது என கூறியுள்ளார்.
திருப்பூர்:

தாராபுரத்தில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழ் என்பது மொழி, கலாச்சாரம், வரலாறு கொண்டது. ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என பாஜக சொல்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது. அது நாட்டின் அடித்தளம் மீது நடத்தப்படும் தாக்குதலாகும்.

வேற்றுமையில் ஒற்றுமை, கலாச்சாரங்கள் மீதான மரியாதை நாட்டின் அடித்தளம். தமிழ் கலாச்சாரத்தை பிரதமர் மோடி அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். பாஜக, ஆர்எஸ்எஸ் ஒரே மொழி, ஒரே மதம் ஒரே நாடு என்று கூறிக்கொண்டு வருகிறது என தெரிவித்துள்ளார். 

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏழைகளின் முதுகெலும்பை உடைத்தார் பிரதமர் மோடி. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான தொழில்கள் அழிந்தே போயின.

பிரதமர் மோடிக்கு நெருக்கமான 5 தொழிலதிபர்களுக்காகவே ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்தினார். மேற்கு வங்கத்தில் பேசுவது தனி மொழி இல்லையா? மே.வங்கத்துக்கு வரலாறு இல்லையா? என்றும் பஞ்சாபி மொழியை மக்கள் பேசவில்லையா? வடகிழக்கில் தனிமொழிகள் இல்லையா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். 

தமிழ்நாட்டின் எதிர்காலத்தை தமிழகத்து இளைஞர்கள் மட்டுமே முடிவு செய்வார்கள். தமிழ் மக்களுடன் எனக்கு இருப்பது குடும்ப உறவு, ரத்த உறவாக கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News