செய்திகள்
தனுஷ்கோடியில் கடல் சீற்றத்தால் சேதமடைந்த தடுப்புச்சுவர் பலப்படுத்தும் பணி நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.

தனுஷ்கோடியில் தடுப்புச்சுவர் பலப்படுத்தும் பணி

Published On 2021-09-09 11:41 GMT   |   Update On 2021-09-09 11:41 GMT
தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றத்தால் சேதமாவதை தடுக்கும் வகையில் தடுப்புச்சுவர் பலப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ராமேசுவரம்:

ராமேசுவரம் அருகே உள்ளது புயலால் அழிந்து போன தனுஷ்கோடி. தனுஷ்கோடி கம்பிப்பாடுக்கும் - அரிச்சல் முனைக்கும் இடைப்பட்ட பகுதியில் சாலையின் பாதுகாப் பிற்காக போடப்பட்டுள்ள தடுப்புச்சுவர் குறிப்பிட்ட சில இடங்களில் கடல் சீற்றத்தால் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றத்தால் சேதமடைந்த தடுப்புச்சுவர் சேதமடைந்த பகுதிகளில் அருப்புக்கோட்டையில் உள்ள குவாரியில் இருந்து கனரக வாகனம் மூலம் பெரிய பெரிய பாறாங்கற்கள் தனுஷ்கோடி பகுதிக்கு கொண்டு வரப்பட்டு கம்பிப்பாடுக்கும்- அரிச்சல் முனைக்கும் இடைப்பட்ட கடற்கரை பகுதியில் கொட்டப் பட்டு தடுப்புச்சுவரை பலப்படுத்தும் பணி கடந்த சில வாரங்களாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதேபோல் அரிச்சல்முனை சாலை பலப்படுத்தும் வகையில் கற்கள் கொட்டப்படும் தடுப்புச்சுவரை பலப்படுத்தும் பணியும் மற்றொரு புறமும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News