செய்திகள்
டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் திரண்ட கூட்டம்.

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் 22 பேர் அனுமதி

Published On 2019-10-18 06:12 GMT   |   Update On 2019-10-18 06:12 GMT
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 22 பேர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் நாள்தோறும் சிகிச்சைக்காக ஏராளமானோர் வருகின்றனர். இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான பூண்டி, கடம்பத்தூர், தொழுவூர், மணவாளநகர், ஈக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 112 பேர்கள் மர்ம காய்ச்சல் காரணமாக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதில் தொழுவூர் ஜாய்ஸ்ராணி, கடம்பத்தூர் ராகேஷ், கரலம்பாக்கம் மகேஷ், பூண்டியை சேர்ந்த தனபால், அமுலு, உஷா, திருவள்ளூர் வெங்கடேசன் உள்ளிட்ட 22 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
Tags:    

Similar News