தொழில்நுட்பச் செய்திகள்
அமேசான்

இந்திய பொருட்களுக்கு தனி விற்பனை பக்கம்- அமேசான் அறிவிப்பு

Published On 2022-02-17 08:49 GMT   |   Update On 2022-02-17 08:49 GMT
இந்திய கலைஞர்கள் தயாரிக்கும் கைவினைப் பொருள்கள், கைத்தறி பொருள்களுக்கு அமேசான் தளத்தில் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல இ-காமெர்ஸ் நிறுவனமான அமேசான் இந்திய பொருட்களை விற்பதற்கு என்று தனி பக்கத்தை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்காக அமேசான் தளத்தில் ஓடிஓபி( ODOP- One district One product) என்று பொருட்கள் தனியாக பட்டியலிடப்பட்டு விற்கப்படுகின்றன.

இந்திய அரசின் இன்வெஸ்ட் இந்தியா, இந்தியன் இண்டஸ்ட்ரீஸ் அசோசியஷன் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து அமேசான் இந்த முன்னெடுப்பை எடுத்துள்ளது.

இதுகுறித்து அமேசான் இந்தியா கூறியதாவது:-

இந்தியா முழுவதும் மூலை முடுக்குகளில் இருந்து உள்ளூர் தயாரிப்பு பொருட்கள், புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் ஆகியவற்றை சந்தைப்படுத்துவதற்கும், சிறு குறு தொழில்கள் செய்யும் உற்பத்தியாளர்கள், குடிசைத் தொழில் செய்பவர்களுக்கும் இந்த தளம் பக்கபலமாக இருக்கும்.

இந்திய கலைஞர்கள் தயாரிக்கும் கைவினைப் பொருள்கள், கைத்தறி பொருள்களுக்கு அமேசான் தளத்தில் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும். இந்திய தயாரிப்புகள் மீது அதீத காதல் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு ஒரே இடத்தில் அவர்கள் விரும்பிய அனைத்து பொருட்களையும் பெற்றுக்கொள்ளலாம்.



இந்திய கலாச்சாரம் பாரம்பரியம் கொண்டது. அதனால் இந்திய பொருள்களுடன் அதன் தயாரிப்பு முறை, கலாச்சாரம், வரலாறு ஆகியவற்றையும் காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

கைவினைப் பொருட்கள், கைத்தறி பொருட்கள் மற்றும் வேளாண் உற்பத்தி பொருள்கள் ஆகியவற்றை ஊக்குவிக்கும் அரசின் முயற்சியை நாங்கள் முன்னெடுப்பது மூலமாக பொருளாதார வளர்ச்சி வேகம் அடையும். வேலைவாய்ப்பு உருவாகும் என்பதோடு, ஊரக குடிசைத் தொழில் நல்ல வளர்ச்சியைக் காணும். இது எங்களுக்கும் மகிழ்ச்சி அளிக்ககூடியது.

இவ்வாறு அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News