செய்திகள்
கோப்புபடம்

தேவதானப்பட்டி அருகே கஞ்சா விற்றவர் கைது

Published On 2021-02-22 13:20 GMT   |   Update On 2021-02-22 13:20 GMT
தேவதானப்பட்டி அருகே கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தேவதானப்பட்டி:

தேவதானப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இத்ரிஸ்கான் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது தேவதானப்பட்டி அருகிலுள்ள காமக்காபட்டி மெயின்ரோட்டில் அதே ஊரை சேர்ந்த மொக்கை (வயது 54) என்பவர் கஞ்சா விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News