இந்தியா
நகரில் கட்டிடங்களை மறைக்கும் அளவுக்கு காற்றில் தூசி கலந்து இருந்ததை படத்தில் காணலாம்.

பாகிஸ்தானில் புழுதிப்புயல் எதிரொலி: மும்பையில் காற்று மாசு அதிகரிப்பு

Published On 2022-01-24 02:57 GMT   |   Update On 2022-01-24 02:57 GMT
மும்பை உள்பட புறநகர் பகுதிகளான தானே, நவிமும்பை, வசாய், பால்கர் போன்ற கடற்கரை பகுதிகளில் புழுதிப்புயல் காணப்பட்டதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்கை எரிய விட்டு சென்றனர்.
மும்பை :

பாகிஸ்தான் கராச்சியில் ஏற்பட்ட புழுதிப்புயல் ராஜஸ்தான், குஜராத் மாநிலத்தை நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. இதன் காரணமாக நேற்று மும்பை உள்பட புறநகர் பகுதியில் நேற்று காலை முதலே புழுதிப்புயல் விளைவு காணப்பட்டது. இதனால் மும்பையில் காற்றின் தரம் குறைந்து உள்ளது. மலாடு மற்றும் மஜ்காவ் பகுதியில் காற்றின் தரகுறியீடு 300-க்கு மேல் அதிகமாக தாண்டியது.

இது பற்றி வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், கராச்சியில் ஏற்பட்ட புழுதிப்புயல் காரணமாக மும்பையில் அதன் பாதிப்பை உணரமுடிந்தது.

12 மணி நேரம் வரையில் புயலின் தாக்கம் இருக்க வாய்ப்பு உள்ளது. இதனால் மும்பையில் வெப்பநிலை குறைந்து குளிர்ந்த காற்று வீசக்கூடும் என ெதரிவித்தார்.

நேற்று மும்பை உள்பட புறநகர் பகுதிகளான தானே, நவிமும்பை, வசாய், பால்கர் போன்ற கடற்கரை பகுதிகளில் புழுதிப்புயல் காணப்பட்டதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்கை எரிய விட்டு சென்றனர். இதன் காரணமாக மும்பை நெடுஞ்சாலைகளில் பல இடங்களில் வாகனங்கள் விபத்துக்குள்ளானதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News