உள்ளூர் செய்திகள்
கொலை செய்யப்பட்ட துரைப்பாண்டி.

ரேஷன் அரிசி கடத்துவதாக புகார் கூறியதால் அடித்து கொன்றோம்- கயத்தாறு ஆட்டோ டிரைவர் கொலையில் கைதானவர்கள் வாக்குமூலம்

Published On 2022-05-05 09:50 GMT   |   Update On 2022-05-05 09:50 GMT
கயத்தாறு ஆட்டோ டிரைவர் கொலையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரேஷன் அரிசி கடத்துவதாக அதிகாரிகளிடம் புகார் கூறியதால் டிரைவரை அடித்து கொலை சய்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கயத்தாறு:

 தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் மேல தெருவை சேர்ந்தவர் துரைபாண்டி (வயது 35), ஆட்டோ டிரைவர். இவர் கோவில்பட்டி ஊரணி தெருவில் வசித்து வந்தார்.  
  
நேற்று முன்தினம் துரைபாண்டி தனது நண்பர்களுடன்   தளவாய்புரம் அருகே உள்ள காட்டுப் பகுதியில் மது அருந்தினர். அப்போது அங்கு வந்த கும்பல் உருட்டுக் கட்டையால் துரைப்பாண்டியை அடித்து கொலை செய்தனர்.


 இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து காப்புலிங்கம்பட்டியை சேர்ந்த மகாராஜன், ராஜாராம், மனோஜ், சவலாப்பேரி ஜானகிராம், கோவில்பட்டி காந்திநகரை சேர்ந்த சின்னதுரை ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

 காப்புலிங்கம்பட்டியை சேர்ந்த சிலர் ரேஷன் அரிசியை வாங்கி திருட்டுத்தனமாக விற்பனை செய்து வருவதாவும், இதனால் அப்பகுதி பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும்   துரைப்பாண்டி, அவரது நண்பர் ஆறுமுகபாண்டி உள்ளிட்டவர்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து வந்தனர். 

Tags:    

Similar News