செய்திகள்
ஏற்றுமதி

பொருளாதார மந்தநிலை: இந்தியாவின் ஏற்றுமதி - இறக்குமதி வீழ்ச்சி

Published On 2020-01-16 09:43 GMT   |   Update On 2020-01-16 10:22 GMT
நாட்டில் நிலவும் பொருளாதார மந்த நிலை பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இதன் ஒரு பகுதியாக நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியும் வீழ்ச்சி அடைந்து உள்ளது.
புதுடெல்லி:

நாட்டில் நிலவும் பொருளாதார மந்த நிலை பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இதன் ஒரு பகுதியாக நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியும் வீழ்ச்சி அடைந்து உள்ளது. இந்தியாவின் ஏற்றுமதி கடந்த டிசம்பர் மாதம் வரையில் பார்க்கும்போது தொடர்ந்து 5 மாதமாக முந்தைய மாதங்களை விட குறைந்துள்ளது.

டிசம்பரில் ஏற்றுமதி 27.4 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது முந்தைய மாதத்தை விட 1.8 சதவீதம் வீழ்ச்சி ஆகும்.

அதேபோல இறக்குமதியும் கடுமையான வீழ்ச்சியில் உள்ளது. டிசம்பர் மாதம் 38.6 பில்லியன் அமெரிக்க டாலராக இறக்குமதி இருந்தது. இது 8.8 சதவீத வீழ்ச்சி ஆகும்.

இதன் காரணமாக வர்த்தகத்தில் 11.3 பில்லியன் டாலர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்கா - சீனா இடையே நடந்து வரும் வர்த்தக போர் மற்றும் உலக அளவில் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள சுணக்கம் போன்றவை இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், வைரம், நகை ஏற்றுமதி, தோல் பொருட்கள், ரசாயன பொருட்கள் ஆகியவற்றில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது.



நாட்டில் உள்ள 30 துறைகளில் 18 துறைகளில் ஏற்றுமதி வாய்ப்பு குறைந்துள்ளது. அடுத்த மாதம் 1-ந்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் அதில் ஏதேனும் சலுகைகள், மாற்றங்கள் செய்யப்பட்டால் தான் மறுபடியும் ஏற்றுமதி அதிகரிக்கும் என்று வர்த்தக நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள்.

குறிப்பாக இரும்பு, நிலக்கரி, ரசாயனம், உலோக பொருட்கள் போன்றவற்றின் வர்த்தகத்தில் கடுமையான பாதிப்பு இருக்கிறது. அதை சரி செய்யும் வகையில் பட்ஜெட்டில் சலுகைகள் இருக்க வேண்டும் என்று கூறினார்கள்.

Tags:    

Similar News