செய்திகள்
கோப்புபடம்

எண்ணை மீதான வரி குறைப்பு - விவசாயிகள் ஏமாற்றம்

Published On 2021-09-14 05:59 GMT   |   Update On 2021-09-14 05:59 GMT
இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் வகைகளின் மீதான வரியை குறைக்கக்கூடாது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர்;

விஜயதசமி, தீபாவளி பண்டிகை போன்றவை நெருங்கி வருவதால் சமையல் எண்ணெய்க்கான தேவை அதிகரிக்கும். 

இந்நிலையில் கச்சா பாமாயில் இறக்குமதி வரி 10ல் இருந்து 2.5 சதவீதம் ஆகவும், சூரியகாந்தி மற்றும் சோயா எண்ணெய்க்கான இறக்குமதி வரி 7.5ல் இருந்து 2.5 சதவீதம் ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து பொங்கலூர் பகுதி தென்னை விவசாயிகள் கூறுகையில்;

இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் வகைகளின் மீதான வரியை குறைக்கக்கூடாது. பொருள் குவிப்பு வரி விதித்து உள்நாட்டு எண்ணெய் உற்பத்தியாளர் மற்றும் விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்.  

தற்போதைய அறிவிப்பு எண்ணெய் தேவை அதிகரிக்கும் என்று கருதி, தேங்காய்களை இருப்பு வைத்து காத்திருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றனர்.
Tags:    

Similar News