ஆன்மிகம்

தம்பதி தெய்வங்களின் தத்துவம்

Published On 2019-06-24 07:50 GMT   |   Update On 2019-06-24 07:50 GMT
முப்பெரும் தெய்வங்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் தங்கள் துணைகளின் மூலம் மனித குலத்துக்கு சில நியதிகளை உணர்த்தி உள்ளனர்.
ரிஷி மூலம் நதி மூலம் அறியாதது நம் மனிதப்பிறவி. கட்டுப்பாடு களற்ற வாழ்வில் கடவுள் எனும் பெரும் சக்திகளை உருவாக்கி, அவர்கள் மூலம் கட்டுப்பாடுகளை உணர்த்தி முறையான வாழ்விற்கு வழிவகுத்தனர் நம் முன்னோர்கள். இதில் முப்பெரும் தெய்வங்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் தங்கள் துணைகளின் மூலம் மனித குலத்துக்கு சில நியதிகளை உணர்த்தி உள்ளனர்.

படைக்கும் கடவுளான பிரம்மா, தன் நாவில் கல்விக்கு அதிபதியான மனைவி சரஸ்வதியை இருத்தி உள்ளதன் மூலம், நாம் பேசும் வார்த்தைகள் இந்த உலகத்துக்கு நன்மை பயப்பதாகவும் இனிமையாகவும் அமையவேண்டும் என்று கருத்து சொல்கிறார்கள்.

காக்கும் கடவுளான விஷ்ணு தன் இதயத்தில் செல்வத்துக்கு அதிபதியான மனைவி லட்சுமியை சுமப்பதன் மூலம், செல்வம் உள்ளவர்கள் பிறருக்கு உதவும் நல்ல இதயம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று உணர்த்துகின்றனர்.

முதல் தெய்வமான சிவபெருமான் வீரத்துக்கு அதிபதியான பார்வதிக்கு தன் உடலில் பாதியைத் தந்து ஆணும் பெண்ணும் சமம் என்பதையும், தைரியம் மனதிலும், வீரம் உடலிலும் இருக்க வேண்டும் என்றும் உணர்த்துகிறார்.
Tags:    

Similar News