ஆன்மிகம்
போத்தனூர் கத்தோலிக்க ஆலயத்தில் சூசையப்பர் ஆண்டு தொடக்க விழா

போத்தனூர் கத்தோலிக்க ஆலயத்தில் சூசையப்பர் ஆண்டு தொடக்க விழா

Published On 2021-02-10 03:41 GMT   |   Update On 2021-02-10 03:41 GMT
போத்தனூரில் உள்ள சூசையப்பர் ஆலயத்தில் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இதில், கோவை மாவட்ட கத்தோலிக்க ஆயர் தாமஸ் அக்குவினாஸ் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார்.
போத்தனூரில் உள்ள சூசையப்பர் ஆலயத்தில் ஆண்டு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில், கோவை மாவட்ட கத்தோலிக்க ஆயர் தாமஸ் அக்குவினாஸ் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார்.

முன்னதாக சூசையப்பர் ஆலயத்திற்கு வந்த ஆயருக்கு ஆலயத்தை சேர்ந்த மக்கள் வரிசையாக நின்று கையில் மெழுகு திரி ஏந்தி வரவேற்றனர். பின்னர் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள புனித சூசையப்பர் ஆலய முகப்பை திறந்து வைத்தார். தொடர்ந்து கொடி மரத்தில் சூசையப்பர் கொடியை ஏற்றினார். இதையடுத்து கொரோனா காலத்தில் இறந்தவர்கள் உடல்களை நல்லடக்கம் செய்த முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த நல்லடக்க குழுவினருக்கு ஆயர் தாமஸ் அக்குவினாஸ் பொன்னாடை போற்றி கவுரவித்து, நினைவு பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் கோவை மாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் தனிஸ்லாஸ், புனித சூசையப்பர் ஆலய பங்கு தந்தை ஹென்றி, உதவி பங்கு தந்தை டேவிட், மற்றும் பக்த சபையினர், பங்கு மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News