செய்திகள்
கோப்புப்படம்

12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்த மாநிலங்கள் பட்டியலில் இணைந்தது உத்தரகாண்ட்

Published On 2021-06-11 07:43 GMT   |   Update On 2021-06-11 07:43 GMT
மத்திய அரசு 2-ம் கட்ட கொரோனா அலைக் காரணமாக சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதாக அறிவித்த நிலையில், மாநில அரசுகளும் அதே முடிவை எடுத்து வருகின்றன.
மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுவாக மத்திய அரசு நடத்தும் சிபிஎஸ்சி, மாநில அரசுகள் நடத்தும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும். இந்தியாவில் இந்த இரண்டு மாதங்களும் கொரோனா தொற்றின் 2-வது அலை மிகவும் உச்சத்தில் இருந்தது. இதனால் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்த பின்னர் தேர்வு குறித்து யோசிக்கலாம் என மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஆர்வம் காட்டின.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த சில நாட்களுக்கு முன் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முடிவு எடுக்க கூடியது. அப்போது கொரோனா காலத்தில் தேர்வு நடத்துவதைவிட மாணவர்களின் உடல்நலன்தான் முக்கிய எனக்கூறி பொதுத்தேர்வை ரத்து செய்வதாக முடிவு எடுக்கப்பட்டது. அதை பிரதமர் மோடி அறிவித்தார்.

அதன்பின் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவித்தன. இந்த நிலையில் இன்று உத்தரகாண்ட் மாநில அரசும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது என அறிவித்துள்ளது.
Tags:    

Similar News