உள்ளூர் செய்திகள்
முகாமில் ரேஷன் கார்டுக்கான சான்றினை வட்ட வழங்கல் அலுவலர் வழங்கினார்.

மேலையூரில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்

Published On 2022-04-17 09:51 GMT   |   Update On 2022-04-17 09:51 GMT
செம்பனார்கோவில் அருகே மேலையூரில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
தரங்கம்பாடி:

தரங்கம்பாடி உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் செம்பனார்கோயில் அருகே மேலையூர் கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் ரேஷன் கார்டு தொடர்பான மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.

முகாமிற்கு வட்ட வழங்கல் அலுவலர் பாபு தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் நளினி ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் ராஜேந்திரன் வரவேற்றார். முகாமில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், பெயர் மற்றும் முகவரி திருத்தம், குடும்ப தலைவர் மாற்றம், முகவரி மாற்றம், கைபேசி எண் மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 

முகாமில் கஞ்சாநகரம், கருவாழக்கரை, மேலையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கள் ரேஷன் கார்டில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக மனு செய்து உடனடியாக தீர்வு பெற்றனர்.

மேலும் 2 பேருக்கு, ஆவணங்களை சரிபார்த்து புதிய மின்னணு ரேஷன் கார்டு பெறுவதற்கான அனுமதி சான்று வழங்கப்பட்டது. முகாமில் வட்ட வழங்கல் அலுவலக தனி வருவாய் ஆய்வாளர் ஜோசப் ராஜ், கிராம நிர்வாக அலுவலர் கணேஷ் குமார், வட்ட பொறியாளர் ஐயப்பன், வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News