ஆன்மிகம்
சுடலை மாடசுவாமி

சுடலை மாடசுவாமி கோவில் கோவில் கொடை விழா

Published On 2021-08-16 08:27 GMT   |   Update On 2021-08-16 08:27 GMT
சாத்தான்குளம் வண்டிபேட்டை சுடலை மாடசுவாமி கோவில் கொடை விழா கடந்த 12-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடந்தது.
சாத்தான்குளம் வண்டிபேட்டை சுடலை மாடசுவாமி கோவில் கொடை விழா கடந்த 12-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடந்தது. முதல் நாள் குடியழைப்பு, சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை, 108 திருவிளக்கு பூஜை, 2-ம் நாள் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, உச்சிகால பூஜை, சுவாமி மஞ்சள் நீராடுதல், சுவாமி தீச்சட்டி ஏந்தி வீதிஉலா வருதல், சாமக்கொடை, 3-ம் நாள் சிறப்பு அலங்கார பூஜை, தீபாராதனை, கிடா வெட்டி சிறப்பு அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

உடன்குடி அருகே உள்ள சண்முகபுரம் குண்டான்கரை சுடலை மாடசுவாமி கோவிலில் ஆடிக்கொடை விழா 3 நாட்கள் நடந்தது. இதையொட்டி முதல் நாள் குடிஅழைப்பு, சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம், 2-ம் நாள் 108 பால்குட ஊர்வலம், சிறப்பு அலங்கார பூஜை, தீபாராதனை, வில்லிசை, தப்பாட்டம், சாமக்கொடை பூஜை, 3-ம் நாள் கொடை விழா நிறைவு பூஜை உள்ளிட்டவை நடந்தது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News