ஆன்மிகம்
தங்க சேஷ வாகனத்தில் விநாயகர் வீதி உலா

காணிப்பாக்கம் கோவில் பிரம்மோற்சவ விழா:தங்க சேஷ வாகனத்தில் விநாயகர் வீதி உலா

Published On 2021-09-15 07:09 GMT   |   Update On 2021-09-15 07:09 GMT
காணிப்பாக்கம் கோவில் பிரம்மோற்சவ விழாவில் சின்ன சேஷ வாகனத்திலும், தங்க பெரிய சேஷ வாகனத்திலும் விநாயகர் நான்கு மாடவீதிகளில் வீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சித்தூர் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் 21 நாட்கள் நடக்கும் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 5-வது நாளான நேற்று காலை ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் சின்ன சேஷ வாகனத்தையும், தங்க சேஷ வாகனத்தையும் பூஜை செய்து தொடங்கி வைத்தனர். காலையில் சின்ன சேஷ வாகனத்திலும், இரவில் தங்க பெரிய சேஷ வாகனத்திலும் விநாயகர் நான்கு மாடவீதிகளில் வீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பிரம்மோற்சவத்தின் 6-வது நாளான இன்று (புதன்கிழமை) காலை சிலுக்க வாகனத்திலும் (கிளி வாகனம்), இரவு ரிஷப வாகனத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
Tags:    

Similar News