செய்திகள்
ஹர்பஜன் சிங்

‘பிங்க் பால்’ சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சவாலாக இருக்கும்: ஹர்பஜன் சிங்

Published On 2019-11-19 14:52 GMT   |   Update On 2019-11-19 14:52 GMT
‘பிங்க் பால்’ ரிஸ்ட் ஸ்பின்னர்களுக்கு சாதகமாகவும், ஃபிங்கர் ஸ்பின்னர்களுக்கு சவாலாகவும் இருக்கும் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது. இதில் பிங்க் பால் பயன்படுத்தப்படுகிறது. எஸ்.ஜி. நிறுவனம் இந்த பந்தை தயார் செய்துள்ளது.

இரவு நேரத்தில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால் குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஹர்பஜன் சிங் ‘பிங்க் பால்’ குறித்து கூறுகையில் ‘‘ரிஸ்ட் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சற்று சாதகமாக இருக்கும். சுழற்பந்து வீச்சாளர்கள் சீம்-ஐ (black stitches) பிடிக்க கடினமானதாக இருக்கும்.

இந்தியாவில் குல்தீப் யாதவ் மட்டும்தான் ரிஸ்ட் ஸ்பின்னர். ஆனால், தேர்வு குறித்து நான் பேச முடியாது. அதுகுறித்து அணி நிர்வாகம் முடிவு செய்யும். ஆனால், சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதற்கு முன், வங்காள தேசம் வேகப்பந்து வீச்சுக்கு சாதமான ஆடுகளத்தில் இந்தியாவை சமாளிக்க வேண்டும்.

மூன்றரை மணியில் இருந்து நான்கரை மணி வரையிலான நேரத்தில் கொல்கத்தாவில் சூரியன் மறையும் நேரம். அப்போது வேகப்பந்து வீச்சாளர்கள் போமான அளவிற்கு சேதம் விளைவிப்பார்கள். ஆனால், அதிகமான பகல்-இரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாட விரும்பினால், ஸ்பின்னர்களை பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

துலீப் டிராபி போட்டிகளை கவனித்தீர்கள் என்றால், குல்தீப் யாதவின் ரிஸ்ட் ஸ்பின்னரை சரியாக  எதிர்கொள்ள முடியவில்லை. லெக் ஸ்பின்னர் ஏராளமான விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

பந்து மீது அதிகமான கலர் பூசப்பட்டிருக்கும். இதனால் பிடிமானம் எளிதாக கிடைக்காது. குறிப்பாக ஃபிங்கர் ஸ்பின்னருக்கு இந்த பிரச்சனை இருக்கும். கையில் இருந்து பந்து வழுக்கிச் செல்லும்’’ என்றார்.
Tags:    

Similar News