செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா வைரசை சீன ஆய்வுக்கூடம் உருவாக்கியதற்கான ஆதாரம் இருக்கிறது- பெண் விஞ்ஞானி சொல்கிறார்

Published On 2020-09-14 08:25 GMT   |   Update On 2020-09-14 08:25 GMT
கொரோனா வைரசை சீன ஆய்வுக்கூடம் உருவாக்கியதற்கான ஆதாரம் இருக்கிறது என்று சீன பெண் விஞ்ஞானி பேட்டியளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாஷிங்டன்:

கொரோனா வைரசை சீனாதான் தனது ஆய்வுக்கூடத்தில் உருவாக்கியது என்று பல நிபுணர்கள் கூறி இருந்தனர்.அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் இதே கருத்தை கூறி இருந்தார்.

ஆனால், சீனா இதை மறுத்தது. சீனாவில் உள்ள வுகான் என்ற இடத்தில் தான் முதலில் இந்த வைரஸ் பரவியது.

அந்த பகுதியில் இறைச்சி மற்றும் கடல் உணவு பொருட்கள் மார்க்கெட் உள்ளது. அங்கிருந்துதான் வைரஸ் பரவியதாக கூறப்பட்டது.

வவ்வால் அல்லது எறும்பு தின்னி ஆகியவற்றின் மூலம் இது பரவி இருக்கலாம் என்றும் கூறினார்கள்.

இந்த நிலையில் சீன பெண் விஞ்ஞானி ஒருவர் சீன ஆய்வுக்கூடத்தில் தான் இந்த வைரஸ் உருவாக்கப்பட்டது. அதற்கான ஆதாரம் தன்னிடத்தில் இருக்கிறது என்று கூறி உள்ளார்.

அவரது பெயர் லீ மெங் யான். இவர், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் பொது சுகாதார கல்வி மையத்தில் விஞ்ஞானியாக இருந்து வந்தார்.

சீனாவில் கொரோனா வைரஸ் பரவி வந்த நிலையில் அவர் திடீரென சீனாவில் இருந்து வெளியேறி அமெரிக்கா சென்று விட்டார்.

தற்போது ரகசிய இடத்தில் வசித்து வரும் அவர், டி.வி. நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவது பற்றிய முதல் தகவல்களை எங்களுக்கு வந்தன.

அப்போது மக்களுக்கு அதுபற்றி சரியாக தெரிய வில்லை. இதை அறிந்த எனது உயர் அதிகாரி இது பற்றி விசாரித்து தகவல் அளிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

எனவே, நான் விசாரணை மேற்கொண்டேன். அப்போது இந்த வைரஸ் வுகானில் உள்ள ஆய்வுக்கூடத்தில் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது என்பது எனக்கு தெரிய வந்தது.

இந்த ஆய்வுக்கூடத்தின் அருகே தான் இறைச்சி மார்க்கெட் உள்ளது. ஆய்வுக் கூடத்தில் இருந்து வைரஸ் வெளியானதை மறைத்து விட்டு மார்க்கெட்டில் இருந்து வைரஸ் வெளியேறியதாக தகவலை பரப்பினார்கள்.

ஆனால், ஆய்வுக்கூடத்தில் உருவாக்கியது என்பதற்கான ஆதாரம் எனக்கு கிடைத்தது. அதை நான் என் வசம் வைத்துள்ளேன். இதனால் எனக்கு பிரச்சினை ஏற்படலாம். நான் காணாமல் செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டது.

எனவே, நான் என்னை பாதுகாத்துக்கொள்ள அமெரிக்கா வந்து விட்டேன்.

நான் இந்த ஆதாரங்களை மக்கள் மத்தியில் வெளியிட போகிறேன். அது அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் இருக்கும்.

இந்த வைரசின் மரபணு மனிதனின் விரலில் உள்ள கைரேகை போன்ற வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News