செய்திகள்
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

Published On 2021-11-30 01:37 GMT   |   Update On 2021-11-30 01:37 GMT
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யலாம். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்திலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தேனி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, தருமபுரி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்பு உள்ளது. 

அதேபோல், புதுச்சேரியிலும் அடுத்த 2 மணிநேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அரபிக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Tags:    

Similar News