தொழில்நுட்பம்
கேலக்ஸி ஃபோல்டு 2 லீக்

சாம்சங் 2020 ஃபிளாக்‌ஷிப் சீரிஸ் பெயர் மாற்றப்படுவதாக தகவல்

Published On 2019-12-26 08:24 GMT   |   Update On 2019-12-26 08:24 GMT
சாம்சங் நிறுவனத்தின் 2020 ஃபிளாக்‌ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போனின் பெயர் மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்11 மற்றும் கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகியுள்ளது. கேலக்ஸி ஃபோல்டு 2 பார்க்க 2019 மோட்டோ ரேசர் போன்று காட்சியளிக்கிறது.

கேலக்ஸி எஸ்11 ஸ்மார்ட்போன் சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஃபிளாக்‌ஷிப் மாடலாக இருக்கிறது. இது கேலக்ஸி எஸ்10 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். மேலும் இது அடுத்த தலைமுறை நோட் சாதனங்கள் வெளியாகும் வரை சாம்சங்கின் புதிய ஃபிளாக்‌ஷிப் மாடலாகவும் இருக்கிறது.

தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் கேலக்ஸி எஸ்11  சீரிஸ் கேலக்ஸி எஸ்20 பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புதிய கேலக்ஸி எஸ்20 மாடலில் பெருமளவு மாற்றங்கள் செய்யப்பட்டு அதிநவீன அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது.



மார்ச் 2010 இல் சாம்சங் தனது கேலக்ஸி எஸ் சீரிஸ் மாடல்களை வெளியிட துவங்கியது. அந்த வகையில் புதிய தசாப்தத்தை துவங்க சாம்சங் எஸ் சீரிஸ் பெயரை 20 இல் இருந்து துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனுடன் கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போனின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த போன் பார்க்க 2019 மோட்டோ ரேசர் போன்று காட்சியளிக்கும் என புதிய புகைப்படங்களில் தெரியவந்துள்ளது. கேலக்ஸி ஃபோல்டு 2 மாடலில் மிகவும் மெல்லிய கிளாஸ் பயன்படுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இது ஸ்மார்ட்போனினை மெல்லியதாக வைத்துக் கொள்ளும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனில் சாம்சங்கின் ஒன் யு.ஐ. 2.0 கொண்டிருக்கும் என தற்சமயம் வெளியாகி இருக்கும் புகைப்படங்கள் உணர்த்துகின்றன. 

புகைப்படம் நன்றி: OnLeaks | Weibo
Tags:    

Similar News