செய்திகள்
கோப்புபடம்

நோய் பரவலை தடுக்க கிராமங்களில் கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ளப்படுமா?

Published On 2021-07-21 09:39 GMT   |   Update On 2021-07-21 09:39 GMT
கொரோனா தொற்றுப்பரவல் தீவிரமாக இருந்த போது கிராமங்களில் கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது.
உடுமலை:

உடுமலை, குடிமங்கலம் ஒன்றியத்தில் 61 ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதியில் பரவலாக தென்மேற்கு பருவமழை பெய்து ஆங்காங்கே மழை நீர் தேங்கியுள்ளது. பல்வேறு பகுதிகளில் தேங்கும் நன்னீரில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்புள்ளது. கொரோனா தொற்றுப்பரவல் தீவிரமாக இருந்த போது கிராமங்களில் கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது.
 
தற்போது இத்தகைய பணிகளுக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. பருவமழை காலத்தில் நோய்த்தாக்குதல் பரவும் வாய்ப்புள்ளது. எனவே கிராமம்தோறும் சிறப்பு முகாம் நடத்தி கொசு புழுக்கள் ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். ஆண்டுதோறும் இப்பணிகளுக்காக சிறப்பு பணியாளர்கள் நியமிப்பது வழக்கம். 

நடப்பாண்டும் தற்போதைய மழை சீசனில் சிறப்பு பணியாளர்களை நியமித்தும், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்களையும் சுகாதாரப்பணிகளில் ஈடுபடுத்த பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதற்கான விழிப்புணர்வையும் சுகாதாரத்துறை வாயிலாக மேற்கொள்ள திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News