தொழில்நுட்பம்
சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட்

சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் இந்திய முன்பதிவு விவரம்

Published On 2020-01-13 11:24 GMT   |   Update On 2020-01-13 11:24 GMT
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் இந்திய முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு இந்தியாவில் அடுத்த வாரம் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்பதிவை தொடர்ந்து கேலக்ஸி நோட் 10 லைட் விற்பனை பிப்ரவரி மாத துவக்கத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது.

புதிய நோட் லைட் ஸ்மார்ட்போன் 6 ஜி.பி. ரேம் மற்றும் 8 ஜி.பி. ரேம் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதன் 6 ஜி.பி. ரேம் வேரியண்ட் ரூ. 39,900 வரை நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் ஆரா குளோ, ஆரா பிளாக் மற்றும் ஆரா ரெட் நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.



சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனில் அதிநவீன கேமரா, எஸ் பென், பெரிய டிஸ்ப்ளே, நீண்ட நேர பேட்டரி பேக்கப் உள்ளிட்டவை வழங்கும் என தெரிகிறது. கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனின் எஸ் பென் ப்ளூடூத் லை எனர்ஜி வசதி மற்றும் ஏர் கமாண்ட் வசதி வழங்கப்படலாம்.

சிறப்பம்சங்களை பொருத்தவரை 6.7 இன்ச் 1080x2400 பிக்சல் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 10 மற்றும் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமராவுடன் மூன்று சென்சார்கள், முன்புறம் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட் மற்றும் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன்களுக்கென சிறப்பு பக்கம் துவங்கப்பட்டுள்ளது. முன்னதாக கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்கியது.
Tags:    

Similar News