செய்திகள்
கட்டிமேடு ஊராட்சியில் பனை விதைகள் விதைக்கப்பட்ட போது எடுத்த படம்.

திருத்துறைப்பூண்டி அருகே 10 ஆயிரம் பனை விதைகள் விதைக்கும் பணி

Published On 2020-11-04 13:10 GMT   |   Update On 2020-11-04 13:10 GMT
திருத்துறைப்பூண்டி அருகே 10 ஆயிரம் பனை விதைகள் விதைக்கும் பணி நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு ஊராட்சியில் வளவனாறு கரைகளில் 10 ஆயிரம் பனை விதைகள் விதைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கட்டி மேடு ஊராட்சி தலைவர் மாலினி ரவிச்சந்திரன் தலைமையில் செம்பியமங்கலம் வளவனாற்று கரையிலிருந்து பாண்டி, சிங்களாந்தி நெடும்பலம், கட்டிமேடு எல்லை கரைகளில் கடந்த 15 நாட்களாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணியில் 10 ஆயிரம் பனை விதைகள் விதைக்கப்பட்டன.

பனை விதைகளை விதைப்பதால் கரைகளில் மண் அரிப்பு தடுக்கப்படும், மேலும் பனை மரங்கள் மூலம் மேகம் குளிர்ச்சி அடைந்து மழை பெய்யும். மக்களுக்கு பல மருத்துவ பலன்களை பனை மரங்கள் அளிக்கின்றன. பனை விதை விதைப்பில் ஊராட்சி செயலாளர் புவனேஸ்வரன், துணைத் தலைவர் பாக்யராஜ், ஆசிரியர் செல்வக்குமார், பணி தள பொறுப்பாளர்கள் சண்முகம் பன்னீர்செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News