செய்திகள்
வங்கி கணக்கு

கிசான் திட்ட முறைகேடு: உண்மையான விவசாயி வங்கி கணக்கில் இருந்து பணம் பிடித்தம்

Published On 2020-09-13 08:07 GMT   |   Update On 2020-09-13 08:07 GMT
அலிவலம் பகதியைச் சேர்ந்த செல்வகணபதி என்ற விவசாயிகள் வங்கிக்கணக்கில் இருந்து பிரதமரின் கிசான் திட்டத்தில் இருந்து 2 தவணையாக விடுவிக்கப்பட்ட ரூ.4 ஆயிரம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர்:

விவசாயிகளுக்கு பிரமரின் கிசான் திட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் அல்லாதோர் 2 ஆயிரத்து 383 பேர் முறைகேடாக சேர்க்கப்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. இவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து இதுவரை ரூ.20 லட்சத்து 2 ஆயிரம் திரும்பப் பெறப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தற்காலிக பணியாளர்கள் 3 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பிரதமரின் கிசான் திட்டத்தின் உண்மையான பயனாளிகளின் வங்கிக் கணக்கில் இருந்தும் பணம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.

திருவாரூரை அடுத்த அலிவலம் பகதியைச் சேர்ந்த செல்வகணபதி என்ற விவசாயிகள் வங்கிக்கணக்கில் இருந்து பிரதமரின் கிசான் திட்டத்தில் இருந்து 2 தவணையாக விடுவிக்கப்பட்ட ரூ.4 ஆயிரம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட விவசாயி செல்வகணபதி கூறியதாவது:-

பிரதமரின் கிசான் திட்டத்தில் கடந்த மே மாதம் விண்ணப்பம் செய்தேன். அதைத் தொடர்ந்து ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தலா ரூ.2 ஆயிரம் என மொத்தம் ரூ.4 ஆயிரம் எனது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 7-ம் தேதி அன்று ரூ.4 ஆயிரம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வங்கி நிர்வாகத்தை அணுகி கேட்டபோது, பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடாக பெறப்பட்ட பணம் படித்தம் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.

எனக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலம் உள்ளது. பிரதமரின் கிசான் திட்டத்தில் இணைந்து பயன் பெறுவதற்கு உரிய அனைத்து தகுதிகளும் இருந்தும் போலி பயனாளிகளை நீக்குவதாகக் கூறி என் பெயரையும் நீக்கி உள்ளனர்.

இதுகுறித்து வங்கி நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும். இதேபோல உண்மையான விவசாயிகளின் கணக்குகளிலும் பணம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.

இதுகுறித்து வங்கி நிர்வாகத்திடம் விசாரித்த கேட்டதற்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வரப்பெற்ற பட்டியல் அடிப்படையில் பணம் பிடித்தம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்னர்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஆனந்த்கூறம்போது:- தவறு செய்தவர்கள் வங்கி கணக்குகள் முடக்கப்டப்டு வருகிறது. இதில் உண்மையான விவசாயிகள் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்ட பணம் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Tags:    

Similar News