செய்திகள்
கமல் ஹாசன்

நாட்டின் ஜி.டி.பி.யில் 6 சதவீதம் கல்விக்கு ஒதுக்கப்படுவது வரவேற்கத்தக்கது: கமல் ஹாசன்

Published On 2020-07-30 11:49 GMT   |   Update On 2020-07-30 11:49 GMT
நாட்டின் ஜி.டி.பி.யில் 6 சதவீதம் கல்விக்கு ஒதுக்கப்படுவது வரவேற்கத்தக்கது என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தனது டுவிட்டரில் ‘‘புதிய கல்விக் கொள்கையில், நாட்டின் ஜி.டி.பி.யில் 6% கல்விக்கு ஒதுக்கப்படுவது வரவேற்கத்தக்கது. அதேபோல் மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையையும் தயார்படுத்த வேண்டும்.

மருத்துவத்துறை வழக்கமான 1 சதவிகிதத்தில் இருந்து உயர்ந்து 7-8% பங்கினை பெறுவது தேசத்தின் நலனுக்கு இன்றியமையாதது’’ எனப் பதிவிட்டுள்ளார்.

புதிய கல்விக்கொள்கைக்கு மத்திய  மந்திரி சபை நேற்ற ஒப்பதல் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News