செய்திகள்
பலியானவர்களின் உறவினர்கள் சாலை மறியல் செய்த காட்சி.

சுற்றுச் சுவர் உரிமையாளரை கைது செய்ய கோரி பலியான 17 பேரின் உறவினர்கள் சாலை மறியல்

Published On 2019-12-02 12:30 GMT   |   Update On 2019-12-02 12:30 GMT
மேட்டுப்பாளையத்தில் சுற்றுச் சுவர் உரிமையாளரை கைது செய்ய கோரி பலியான 17 பேரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேட்டுப்பாளையம்:

மேட்டுப்பாளையம் நடூர் ஏ.டி. காலனியில் இன்று அதிகாலை சுற்றுப்புற காம்பவுண்டு சுவர் 3 வீடுகள் மீது விழுந்தது. இதில் வீடுகள் இடிந்து 17 பேர் பலியானார்கள். அவர்களது குடும்பத்திற்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.


இந்த நிலையில் வீடு இடிந்து பலியானவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று மதியம் திடீரென மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பலியான 17 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும். 17 பேரை பலி வாங்கிய காம்பவுண்டு சுவர் உரிமையாளரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த மறியல் நடைபெற்றது.

இதன் காரணமாக மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News