ஆன்மிகம்
சந்திர பகவான்

ரோகிணி நட்சத்திரக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக செய்ய வேண்டிய பரிகாரங்கள்

Published On 2021-08-18 08:25 GMT   |   Update On 2021-08-18 08:25 GMT
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் தோஷங்கள் நீங்கி, வாழ்வில் மேன்மையான பலன்களை பெறுவதற்கான பரிகாரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
நவகிரகங்களில் சந்திர பகவானின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரமாக ரோகிணி நட்சத்திரம் இருக்கிறது. ரோகிணி நட்சத்திரக்காரர்கள் தங்களின் வாழ்வில் சிறந்த நிலையை அடைவதற்கு கீழ்கண்ட பரிகாரங்களை செய்து வருவது சிறப்பானதாகும்.

வருடத்திற்கு ஒருமுறை நவகிரகங்களில் சந்திர பகவானுக்குரிய திருக்கோயில்களான திங்களூர், திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவில் போன்றவற்றிற்கு சென்று வழிபட வேண்டும். எந்த ஒரு புதிய காரியத்தை தொடங்குவதற்கு முன்பும் பெற்ற தாயாரையும், தாய் வழி முன்னோர்களையும் வழிபட்டு தொடங்குவது சிறந்த வெற்றிகளைத் தரும். கோடைக்காலங்களில் மற்றும் கோவில் விழாக்களில் மக்களின் தாகத்தைத் தணிக்க மோர் பந்தல் அமைத்து, மோர் தானம் வழங்குவது நல்லது. மேலும் வீட்டிற்கு வெளியே பசுக்கள், நாய்கள் போன்றவை தாகத்தைத் தீர்த்துக் கொள்ளும் வகையில் நீர் தொட்டி அமைத்து, அதில் எப்போதும் நீர் ஊற்றி வைத்தது சிறப்பான பலன்களைத் தரும்.

ரோகிணி நட்சத்திரத்திற்குரிய தலவிருட்சமாக நாவல் பழ மரம் இருக்கிறது. நாவல் மரம் தலவிருட்சமாக இருக்கும் கோயில்களுக்கு சென்று நாவல் பழமரத்தையும், அங்குள்ள இறைவனையும் வழிபடுவது ரோகிணி நட்சத்திரக்காரர்களின் தோஷங்களை நீக்கும். மன நோயாளிகளுக்கு உணவு, ஆடை தானங்கள் போன்றவற்றை செய்வது சந்திர பகவானின் அருளாசிகளைத் தரும் பரிகாரமாக இருக்கிறது.
Tags:    

Similar News