தொழில்நுட்பச் செய்திகள்
டைசன் ஜோன் ஹெட்போன்கள்

காற்றை சுத்திகரிக்கும் ஹெட்போன்கள்- பாட்டு கேட்டுக்கொண்டே இனி பாதுகாப்பாக இருக்கலாம்!

Published On 2022-03-30 07:00 GMT   |   Update On 2022-03-30 07:00 GMT
வைரஸ், பாக்டீரியா மற்றும் பிற காற்று மாசுக்களில் இருந்து இந்த ஹெட்போன்கள் நம்மை பாதுகாக்கும் என கூறப்படுகிறது.
டைசன் ஜோன் நிறுவனம் காற்றை சுத்திகரிக்கும் ஹெட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளது.

இந்த ஹெட்போன்களின் இயர்கப்புகளில் 2 மோட்டார்கள் உள்ளன. இது சுத்திகரிக்கப்பட்ட காற்றை மூக்கு மற்றும் வாய்களுக்கு அனுப்புகிறது. இந்த இயர்போன் லோ, மீடியம், ஹை மற்றும் ஆட்டோ என 4 வகையான சுத்திகரிப்பு மோட்களை வழங்குகிறது.

இந்த இயர்போன்களில் உள்ள இன்பில்ட் ஆக்சலெரோமீட்டர்கள் நமக்கு தேவையான நேரத்தில் சுத்திகரிப்பு மோட்களை தானாகவே மாற்ற உதவுகிறது.

இந்த சுத்திகரிப்பு அம்சத்தில் எலக்ட்ரோஸ்டேட்டிக் ஃபில்டரேஷன் தரப்பட்டுள்ளது. இது 0.1 மைக்ரான் அளவிலான தூசுகளை கூட 99 சதவீதம் வடிகட்டிவிடும். தூசு, மகர்ந்த துகள்கள், பாக்டீரியா, வைரஸ் மற்றும் காற்றில் உள்ள நைடரஜன் ஆக்ஸைடு, சல்பர் டை ஆக்சைடு, ஓசோனை கூட இந்த ஹெட்போன்கள் வடிகட்டும் என கூறப்படுகிறது.

இந்த ஹெட்போன்களை டைசன் ஜோன் செயலியுடன் இணைத்து சுத்திகரிப்பை நாம் கண்காணிக்கலாம். செட்டிங்குகளையும் மாற்றிக்கொள்ளலாம்.

மேலும் இந்த ஹெட்போனில் உள்ள நியோடைமியம் டிரைவர்கள் நியூட்ரலான சவுண்ட் சிக்னேச்சர்களை வழங்குகிறது. மேலும் இதில் உள்ள ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் மோட்களும் ஆடியோவை ஆம்பிளிஃபை செய்ய உதவுகிறது.
Tags:    

Similar News