தொழில்நுட்பம்
ட்விட்டர்

இந்தியாவில் புது வசதியை வழங்கும் ட்விட்டர்

Published On 2021-02-17 07:45 GMT   |   Update On 2021-02-17 07:45 GMT
ட்விட்டர் சமூக வலைதளத்தில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


ட்விட்டர் நிறுவனம் தனது தளத்தில் வாய்ஸ் மெசேஜிங் வசதியை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தது. தற்சமயம் இந்த அம்சம் இந்தியா, பிரேசில் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் படிப்படியாக வெளியிடப்பட்டு வருகிறது. வாய்ஸ் டிஎம் (Voice DM) என அழைக்கப்படும் புது அம்சம் கொண்டு மற்றவர்களுக்கு தெரிவிக்க விரும்பும் தகவலை குரல்வழி பதிவாக அனுப்ப முடியும்.

முன்னதாக வாய்ஸ் ட்விட் எனும் அம்சத்தை ட்விட்டர் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. முந்தைய வாய்ஸ் ட்விட் போன்றே வாய்ஸ் டிஎம் அனுப்புவதற்கான கால அளவு 140 நொடிகளாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் பயனர்கள் அதிகபட்சம் 140 நொடிகளுக்குள் தங்களின் தகவலை பதிவு செய்து அனுப்ப முடியும்.



புதிய வாய்ஸ் டிஎம் அம்சம் ட்விட்டர் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ட்விட்டரில் வழக்கமான டிஎம் செய்வதை போன்றே புதிய அம்சத்தையும் இயக்க முடியும். இதற்கு டிஎம் ஆப்ஷனில் Voice Recording எனும் ஐகானை க்ளிக் செய்து குரலை பதிவு செய்ய வேண்டும். குரல் பதிவு முடிந்ததும், மற்றொரு முறை க்ளிக் செய்ய வேண்டும்.

பின் பயனர் பதிவு செய்த குரலை மீண்டும் கேட்பதற்கான வசதி வழங்கப்படுகிறது. இதனால் குரல் பதிவை அனுப்பும் முன், அதனை சரிபார்க்க மீண்டும் அதனை கேட்கலாம். ஐஒஎஸ் பயனர்கள் வாய்ஸ் ரெக்கார்டு செய்யும் ஐகானை அழுத்தி பிடித்து குரலை பதிவு செய்ய துவங்க வேண்டும், பின் மேல்புறமாக ஸ்வைப் செய்து ஐகானில் இருந்து விரலை விடுவிக்க வேண்டும். 

முதற்கட்டமாக வாய்ஸ் டிஎம் வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளங்களில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. வெப் பிரவுசரில் வாய்ஸ் டிஎம்-களை கேட்க முடியும். புதிய அம்சம் வலைதள உரையாடல்களை மேலும் உயிரூட்டும் என ட்விட்டர் தெரிவித்து உள்ளது. 
Tags:    

Similar News