ஆன்மிகம்
காசி விஸ்வநாதர் கோவிலில் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி படர்ந்த அபூர்வ காட்சி

காசி விஸ்வநாதர் கோவிலில் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி படர்ந்த அபூர்வ காட்சி

Published On 2020-08-24 03:35 GMT   |   Update On 2020-08-24 03:35 GMT
கரிகால் சோழனால் கட்டப்பட்ட காசி விஸ்வநாதர் கோவிலில் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி படர்ந்த அபூர்வ காட்சி நிகழ்ந்தது. இந்த காட்சி இன்றும், நாளையும் காலையில் நிகழும்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சர்க்கார் பாளையத்தில் பிரசித்திபெற்ற காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. கரிகால் சோழனால் கட்டப்பட்ட இந்த கோவில் பண்டைக்கால தமிழர்களின் கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் 3 நாட்கள் கோவில் கருவறையில் உள்ள சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி படர்வது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். அதன்படி, ஆவணி மாதம் 7, 8, 9-ந்தேதிகளில் சூரிய கதிர் சிவலிங்கத்தின் மீது விழுகிறது. 3 நாட்கள் நடக்கும் இந்த அரிய நிகழ்வை காண சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வருவது வழக்கம்.

இந்தநிலையில் ஆவணி மாதம் 7-ந்தேதியான நேற்று காலை 6.30 மணி அளவில் சூரிய உதயத்தின் போது வெளிப்பட்ட கதிர்கள் கோவில் கருவறையில் உள்ள சிவலிங்கத்தின் மீது படர்ந்தது. அப்போது சிவனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த கோவிலில் இன்னும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் நேற்று சூரிய ஒளியில் ஜொலித்த சிவலிங்கத்தை உள்ளூர் பக்தர்கள் பலர் கோவிலுக்கு வெளியே நின்று தரிசனம் செய்து சென்றனர். இந்த காட்சி இன்றும் (திங்கட்கிழமை), நாளை (செவ்வாய்க்கிழமை) ஆகிய 2 நாட்களும் காலையில் நிகழும். 
Tags:    

Similar News