உள்ளூர் செய்திகள்
தார்சாலை அமைக்கும் பணியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்த காட்சி.

உடுமலை பகுதியில் ரூ.61 லட்சத்தில் வளர்ச்சிப்பணிகள் - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்

Published On 2022-01-29 06:39 GMT   |   Update On 2022-01-29 06:39 GMT
வெள்ளக்கோவில் உத்தமபாளையத்தில் வட்டமலை அணை உள்ளது. அணைக்கு நீர் வரத்து இல்லாததால் கடந்த 30 வருடங்களாக அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.
திருப்பூர்:

தமிழக செய்தித்துறை அமைச்சா மு.பெ.சாமிநாதன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு. சண்முகசுந்தரம் முன்னிலையில் உடுமலை ஊராட்சி ஒன்றியம் சின்னவீரம்பட்டி ஊராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் ரூ.45 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டடம் கட்டும் பணி மற்றும் ரூ.16 லட்சம் மதிப்பில் புதியதார் சாலை மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி என மொத்தம் ரூ.61 லட்சம் மதிப்பில் புதிய வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதல்-அமைச்சர், தமிழக மக்களின் வளர்ச்சிக்கென பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். பதவியேற்று 7 மாத காலத்தில் பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார்.  

உடுமலை ஊராட்சி ஒன்றியம் சின்னவீரம்பட்டி ஊராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி மற்றும் 15வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.16 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலைமற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி என மொத்தம் ரூ.61 லட்சம் மதிப்பில் புதிய வளர்ச்சி திட்டப் பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது என்றார். 

வெள்ளக்கோவில் உத்தமபாளையத்தில் வட்டமலை அணை உள்ளது. அணைக்கு நீர் வரத்து இல்லாததால் கடந்த 30 வருடங்களாக அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்த அணைக்கு அருகில் செல்லும் அமராவதி ஆற்றிலிருந்து குழாய்கள் மூலமாகவோ அல்லது பரம்பிக்குளம் - ஆழியாறு வாய்க்காலில் இருந்ததோ அணைக்கு தண்ணீர் கொண்டு வந்து நிரப்ப வேண்டுமென அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இந்நிலையில் அணைப்புதூரிலிருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரும் வாய்ப்புகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டார் இதேபோல ஆண்டிபாளையம் - தாசவநாயக்கன்பட்டி - வட்டமலை குழாய்த் திட்டமும் பரிசீலிக்கப்பட்டது. 
Tags:    

Similar News