ஆட்டோமொபைல்
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 1.ஆர். கான்செப்ட்

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 1.ஆர். கான்செப்ட் அறிமுகம்

Published On 2019-11-07 08:31 GMT   |   Update On 2019-11-07 08:31 GMT
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது புதிய மோட்டார்சைக்கிள் கான்செப்ட்டை அறிமுகம் செய்துள்ளது.



உலகின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் எக்ஸ்ட்ரீம் 1.ஆர். கான்செப்ட்டை EICMA 2019 விழாவில் அறிமுகம் செய்துள்ளது. 

புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 1.ஆர் கான்செப்ட் தற்சமயம் இந்தியாவில் விற்பனையாகும் மாடலை விட முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது. எக்ஸ்ட்ரீம் 200ஆர் வழக்கமான வடிவமைப்புக்கு மாற்றாக இளம் தலைமுறையினரை கவரும் வகையில் அதிநவீன அம்சங்களை கொண்டிருக்கிறது.



அதன்படி ஹீரோ எக்ஸ்ட்ரீம் 1.ஆர் கான்செப்ட் மாடலில் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், பெரிய ஃபியூயல் டேன்க், எல்.இ.டி. டெயில் லேம்ப் மற்றும் இதர உபகரணங்கள் மற்றும் அம்சங்கள் வழங்கப்படுகின்றன. எனினும், இது கான்செப்ட் மாடல் என்பதால் இதன் உற்பத்தி வடிவம் அதிகளவு மாற்றம் செய்யப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 1.ஆர் கான்செப்ட் முன்புற ஃபோர்க் பெரிதாகவும், இருபுறங்களிலும் பெரிய டிஸ்க் பிரேக் மற்றும் மெல்லிய டையர்களை கொண்டிருக்கிறது. கான்செப்ட் வடிவத்தை நிஜத்தில் உருவாக்குவது அதிக சவால் நிறைந்த பணி என்பதால், இதன் இறுதி வடிவம் எவ்வாறு காட்சியளிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Tags:    

Similar News