செய்திகள்
ஆம்புலன்ஸ் தடுத்து நிறுத்தம்

ஆந்திராவில் இருந்து வரும் ஆம்புலன்ஸ்களை எல்லையில் தடுக்கும் தெலுங்கானா: நோயாளிகள் பரிதவிப்பு

Published On 2021-05-10 13:49 GMT   |   Update On 2021-05-10 13:49 GMT
ஆந்திராவில் இருந்து அனுமதி பெறாமல் கொரோனா நோயாளிகளை ஏற்றி வரும் ஆம்புலன்ஸ்களை தெலுங்கானா அதிகாரிகள் எல்லையிலேயே தடுத்து திருப்பி அனுப்புகின்றனர்.
இந்தியாவின் தென்மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களும் கொரோனா தொற்றின் 2-வது அலையில் இருந்து தப்பவில்லை. கேரளா, கர்நாடகா மாநிலத்தில் தினந்தோறும் பாதிப்பு அதிகமாக உள்ளது.

மேற்கொண்ட மாநிலங்களில் தினந்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான மருத்துவமனைகளில் நோயாளிகளை உள்ளே சேர்த்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவிற்கு கொரோனா நோயாளிகளை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியால், நோயாளிகள் பரிதவிப்பிற்குள்ளாகினர்.

இன்று ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலத்திற்கு வந்த ஆம்புலன்ஸ்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. நோயாளிகளை சேர்க்கும் மருத்துவமனையின் அனுமதி, படுக்கையை உறுதி செய்யாவிடில் அனுமதிக்க முடியாது என தெலுங்கானா அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். மேலும், அனுமதி பெறாவிடில் ஆம்புலன்ஸ்கள் திருப்பி அனுப்பப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.



இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த செய்தி மேல்மட்ட அதிகாரிகள் வரை சென்றது. அதன்பின் ஆந்திராவின் மேல்மட்ட அதிகாரிகள் தெலுங்கானா அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தெலுங்கானா அதிகாரிகள் இந்த பிரச்சினை உடனடியாக சரி செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags:    

Similar News