செய்திகள்
பிரதமர் மோடி

நாட்டின் முன்னேற்றத்துக்கு ஊழல் தடையாக உள்ளது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

Published On 2021-10-21 01:57 GMT   |   Update On 2021-10-21 01:57 GMT
மோசடி நடந்த பிறகு குற்றங்களைக் கண்டறியும் வழிகளில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, ஊழலைத் தடுக்க அனைவரும் வேலை செய்ய வேண்டும்.
கேவடியா :

மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ.) மற்றும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய (சி.வி.சி.) அதிகாரிகளின் கூட்டு மாநாடு ஒன்று குஜராத்தின் கேவடியாவில் நடந்தது. இதில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:- ஊழல், பெரியதோ அல்லது சிறியதோ, அது பொதுமக்களின் உரிமைகளை பறிக்கிறது. நாட்டின் முன்னேற்றத்துக்கு தடையாக இருப்பதுடன், அதற்கான கூட்டு முயற்சிகளையும் பாதிக்கிறது. எவ்வளவு சக்தி வாய்ந்தவராக இருந்தாலும், தேசிய நலனுக்கு மாறாக அல்லது நம் மக்களுக்கு எதிராக வேலை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தேசிய நலன் கருதி நமது பணியை தொடர வேண்டும்.

மோசடி நடந்த பிறகு குற்றங்களைக் கண்டறியும் வழிகளில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, ஊழலைத் தடுக்க அனைவரும் வேலை செய்ய வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Tags:    

Similar News