ஆன்மிகம்
வீட்டில் தீபம் ஏற்றி வழிபாடு

வீட்டில் தீபம் ஏற்ற வேண்டிய இடங்களும், பலன்களும்

Published On 2020-10-06 07:52 GMT   |   Update On 2020-10-06 07:52 GMT
தீப வழிபாடு என்பது நம் கலாச்சாரத்துடன் இரண்டறக் கலந்தது ஆகும். வீட்டில் எந்த இடத்தில் தீபம் ஏற்றினால் என்ன பலன்கள் கிடைக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.
தீப வழிபாடு என்பது நம் கலாச்சாரத்துடன் இரண்டறக் கலந்தது ஆகும். நாம் வசிக்கும் வீட்டில் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் தீபம் ஏற்றிவைத்து, அந்தத் தீபத்தை நமஸ்காரம் செய்தால், தீய சக்திகள் யாவும் விலகி வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும் என்கின்றன ஞான நூல்கள்.

வீட்டில் தீபம் ஏற்றி வைத்து வழிபடுவதால் சுபம், ஆரோக்கியம், நன்மை, தனவரவு அதிகரித்தல், நல்லபுத்தி ஆகியவை பெருகும். தீபங்களுக்கு என்று ஒரு வழிபாடு பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது தமிழ் மாதத்தில் தீபத்தை சிறப்பிக்கும் மாதம் திருக்கார்த்திகை. இந்தக் கார்த்திகை மாதத்தில் இல்லத்தில் திருவிளக்கேற்றி வழிபடுவது மிகவும் விசேஷமாகும்.

தீபம் ஏற்ற வேண்டிய இடங்களும், விளக்குகளும்:

கோலமிடப்பட்ட வாசலில் ஐந்து விளக்குகள் ஏற்றி வைத்தால் லட்சுமி கடாட்சம்.

பூஜையறையில் இரண்டு கார்த்திகை விளக்குகள் ஏற்றி வைத்து வணங்கினால் சர்வ மங்கலங்கள் உண்டாகும்.

சமையல் அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்து வணங்கினால் அன்ன தோஷம் ஏற்படாது.

தோட்டம் முதலான வெளிப்பகுதிகளில், எமனை வேண்டி தீபம் ஏற்ற வேண்டும். இதனால் மரண பயம் நீங்கும், ஆயுள்விருத்தி உண்டாகும்.

திண்ணைகளில் நான்கு விளக்குகள் ஏற்றுவதன் மூலன் தீயவைகள் வீட்டில் அண்டாது.

மாடக்குழிகளில் இரண்டு விளக்குகள் ஏற்றுவது சிறந்த பலனைக் கொடுக்கும்.
Tags:    

Similar News