ஆன்மிகம்
கும்பாபிஷேகம்

சத்ய யுக சிருஸ்டி கோவில் கும்பாபிஷேக விழா

Published On 2021-01-19 04:43 GMT   |   Update On 2021-01-19 04:43 GMT
திருமங்கலம் அருகே ராயபாளையம் கிராமத்துக்கு செல்லும் வழியில் சத்ய யுக சிருஸ்டி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
திருமங்கலம் அருகே ராயபாளையம் கிராமத்துக்கு செல்லும் வழியில் சத்ய யுக சிருஸ்டி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இங்குள்ள நவராஜ் மண்டபத்தில் விரிந்த தாமரைப்பூ போல் அடிப்பாகமும், கூரையும் கொண்ட வட்ட வடிவத்தில் ஒரே கோபுரத்தின் கீழ் மையத்தில் ஸ்ரீ காளத்தீஸ்வரர் சன்னதி அமைந்துள்ளது. 

இதனைச் சுற்றி அடுத்தடுத்த கட்டங்களில் நவக்கிரகங்கள், 12 ராசிகளின் அதிபதிகள், 27 நட்சத்திர தேவதைகளின் சிலைகளுக்கும் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. முக்தி நிலையம் வசந்த சாய் முன்னிலையிலும், வசந்த சாய் பவுண்டேஷனின் கவுரவ அறங்காவலர் மற்றும் தர்மகர்த்தா வெங்கட்ராமன் சுவாமிஜி தலைமையிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

இந்த விழாவில் ராயபாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாக கமிட்டியினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News