செய்திகள்

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கம்

Published On 2019-04-21 10:45 GMT   |   Update On 2019-04-21 10:45 GMT
இலங்கையில் இன்று மாலை 6 மணியில் இருந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வதந்திகள் பரவாமல் தடுக்க சமூக வலைத்தளங்களை அரசு முடக்கியது. #SriLankablasts #SriLankacurfew #Colomboblast #SriLankabans #SocialMediaban
கொழும்பு:

இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு வரிசையில் தெம்மட்டகொடா குடியிருப்பு பகுதியில் இன்று பிற்பகல் சுமார் 2.15 மணியளவில் 8-வதாக நிகழந்த மற்றொரு குண்டுவெடிப்பு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதைதொடர்ந்து, இன்று மாலை 6 மணியில் இருந்து நாளை காலை 6 மணிவரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக இலங்கை அதிபர் மாளிகை அறிவித்தது. பின்னர் ஊரடங்கு உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. நாளையும் நாளை மறுநாளும் (ஏப்ரல் 22,23) அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பான தவறான செய்திகளும், வதந்திகளும் பரவாமல் தடுக்கும் வகையில் பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை அரசு முடக்கியது. #SriLankablasts #SriLankacurfew #Colomboblast #SriLankabans #SocialMediaban
  
Tags:    

Similar News